April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி

நாடாளும் மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது.

மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சம்பந்தமாக பேச ஐந்து பேர் கொண்ட குழு அமைப்பு.

புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டது. கூட்டணியில் முதல் கட்சியாக அகில இந்திய கட்சியான நாடாளும் மக்கள் கட்சி இணைந்தது.

புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நேற்று முன்தினம் நான் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றால் , மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் எல்லாம் மாற்று கட்சி மற்றும் இயக்கங்களில் மனக்குமுறலுடன் பயணித்து கொண்டிருப்பவரகள் கழக கூட்டணியில் இணைந்து செயல்பட அனைவருக்கும் பத்திரிக்கை வாயிலாக அழைப்பு விடுத்திருந்தேன். அதனை ஏற்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் திரு. அக்னி செல்வராஜ் அவர்கள் என்னை நேரில் சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரியின் நலன் மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்தி வரும் தேர்தலில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, 70 ஆண்டு கால ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு புதிய அரசியல் சரித்திரத்தை படைக்க ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று கூட்டணியில் இணைந்து செயல்பட கடிதம் கொடுத்து உறுதிப்படுத்தினார்.

இந்த மூன்றாவது அணியை மேலும் வலுப்படுத்த மற்ற அரசியல் கட்சி , பொதுநல இயக்கங்கள் மற்றும் தொகுதி சமூக ஆர்வலர்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த N.சிவக்குமாரன் தலைமையில் , S. சிவகுமார், S.கோமதிசங்கர், J. சுப்ரமணியன் S. வாசுகி ஆகிய ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த குழுவினர் கூட்டணி குறித்து எடுக்கும் முடிவுகள் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அவர்களின் ஒப்புதலோடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனி மனிதன் நலனை துறப்போம்.!!!.
புதுச்சேரி நலனை முன்னெடுப்போம்.!!!.

ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.

Facebook
YouTube
Instagram
WhatsApp