அரியலூர் மாவட்டத்தில்மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான கூராய்வுக் கூட்டம்தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்புதுக்கோட்டை விஜயா தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான கூராய்வுக் கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் .இரத்தினசாமி, ஆணைய உறுப்பினர்கள் முனைவர்.உஷா நந்தினி .செல்வேந்திரன் டாக்டர்.மோனோமடில்டா ஆகியோர் முன்னிலையில் இன்று (30.10.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் தொடர்பாக பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதிகளவிலான அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் என்பது ஒவ்வொருவருக்கும் தொடர்புடையதாகும். காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறையினருக்கும் நமது சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பானது பல்வேறு வழிமுறைகளையும், அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. இத்தகைய வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்களை பயன்படுத்தி நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்து செய்து கொண்டிருக்கும் மற்றும் செய்ய இருக்கும் பணிகள் குறித்து கலந்தாலேசிக்கும் வகையில்தான் ஆணையத்தின் சார்பில் இக்கூட்டம் இன்றையதினம் நடைபெறுகிறது.
கடந்த ஐீன் திங்கள் 23 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி இவ்வாணையத்தில் செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டது. 38 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களோடும் நேரடியாக கலந்து பேசி, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற குழந்தைகள் நலன் சார்ந்த பிரச்சனைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களில் வெகு வேகமாக 25 மாவட்டங்களில் ஆணையத்தின் சார்பில் இத்தகைய ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. ஆணையத்தின் பணிகள் என்பது முழுக்க கண்காணிப்பதாகும். அலுவலர்கள் மேற்கொள்ளுகின்ற பணிகளில் ஏற்படுகின்ற சவால்களாக இருந்தாலும், சங்கடங்களாக இருந்தாலும் அவற்றிற்கு எத்தகைய பரிந்துரைகளை செய்வது என்பதுதான் இவ்வாணையத்தின் முக்கிய பணிகளாகும். அதன் காரணமாகதான் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்கின்ற அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் ஏற்படுகின்ற சவால்கள் அவற்றிற்கு எந்த மாதிரியான பரிந்துரைகளை செய்வது என்பது குறித்த கலந்தாய்வுதான் இன்றையதினம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசானது கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதுடன், அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. கல்வி கற்றலில் இடைநிற்றல் ஏற்படும் போதுதான் அனைத்து பிரச்சனைகளும் அங்கிருந்து ஆரம்பமாகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சாலையோரத்தில் வேலையற்றவர்கள், வேலையற்றவர்களின் எண்ணித்திலே விபரீத எண்ணகள் என்று அன்றே கூறியுள்ளார். எனவே கல்வியில் இடைநிற்றல் எங்கே தொடங்குகிறது என்ற வேரினை நாம் கண்டறிந்தால் அங்கு இருக்கின்ற பிரச்சனைகளை காண இயலும். எத்தகைய சவால்கள் இருக்கிறது. மீண்டும் அவர்களை பள்ளிக்கு கொண்டு வருவதற்கு நாம் சந்திக்கின்ற சவால்கள் என்ன, எதன் காரணமாக இயலாமல் போனது, எந்தெந்த வட்டாரங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாக இருக்கிறது, அதற்கு என்ன காரணங்கள் என்பதையெல்லாம் நாம் ஆராய்ந்தால் இத்தகைய சவால்கள் மற்றும் சங்கடங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். அதற்கான தீர்வையும் கண்டறிய இயலும். அதற்காகத்தான் கல்வித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இவற்றில் உள்ள சவால்களை அவர்கள் மூலமாக தெரிந்துகொள்வதற்காக தான் இக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
எனவே குழந்தைகளின் இனிய உலகமாக தமிழ்நாட்டை மாற்றுவோம், கல்வி இடைநிற்றல் இல்லாமல், கல்வி எவ்வளவு அவசியம் என்பதை கிராமங்கள் தோறும் நாம் உணர்த்துவோம். கல்வியில் தமிழ்நாட்டை மேலும் மிகப்பெரிய முன்றேற்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்போம். குழந்தைளுடைய உலகமென்பது நாம் அறிந்துகொள்ள முடியாத அவர்களுக்கே பிரத்யேகமாக இருக்கின்ற உலகம். அந்த குழந்தைகள் உலகத்தை நன்கு அறிந்து அவர்களை மென்மேலும் வளர்ப்பதற்கும், வாழ்வதற்கும், பாதுகாப்பதற்கும் அனைத்து வாய்ப்புகளையும் அரசு வழங்குகிறது. அதனை கொண்டு சேர்க்கின்ற பணிகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும் அதற்கு இந்த ஆணையம் உறுதுணையாக செயல்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்..சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தேன்ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!