புதுச்சேரி:
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் அன்னை தெரேசா சமூக சேவை இளைஞர்கள் அறக்கட்டளை, தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிமுக விழா புதுச்சேரி உழவர்க்கரை சமுதாய நலக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், புதுச்சேரி மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,
மாநில செயலாளர்: ஷர்மா
மாநில பொதுச் செயலாளர்: ஸ்டீபன் (எ) பார்த்திபன்
மாநிலத் துணை பொதுச் செயலாளர்: விஜய பாரதி
மாநில துணைச் செயலாளர்: அசோக்
மாநில ஒருங்கிணைப்பாளர்: சிவா
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்: முத்து (எ) ரஞ்சித்
மாநில அமைப்பாளர்: ரமேஷ் (எ) காத்தவராயன்
மாநில தலைமை நிலை செயலாளர்: விஜய பிரகாஷ்
மாநில இளைஞரணி செயலாளர்: ஜான்
மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர்: சதீஷ்குமார்
மாநில இளைஞர் அணி துணை பொதுச் செயலாளர்: ஞானபிரகாசம்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்: முருகன்
மாநில இளைஞரணி அமைப்பாளர்: வேல்முருகன்
மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்: ஆதித்யன்
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ராஜ்குமார், “அன்னை தெரேசாவின் தியாகமும் அன்பும் தான் இந்த அறக்கட்டளையின் அடிப்படை. இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம் என்ற நோக்கத்தில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரி இளைஞர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இதில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
விழாவின் இறுதியில், புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகிகள் தங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய நிறுவனர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்களுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election