பாண்டிச்சேரி வெங்கட்டா நகர் தமிழ்ச்சங்கம் வளாகத்தில் அனைத்து உலக முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம்,நாராயணசாமி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார். மேலும் என்பிஆர் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் டாக்டர் வித்யா மற்றும் பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஸ்ரீதர் பிள்ளை, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி தலைவர் சித்ராதேவி மற்றும் துணைச் செயலாளர்கள் மதிவாணன், சிவகுமார், திருவேங்கடம், ராஜா, தணிகைவேல், லாஸ்பேட் திருவேங்கடம், எஸ்.பி. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election